மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் – கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, அதனை நிறைவேற்றவோ, நடைமுறைப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, மாற்றுத்திறனாளிகளை காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது.

சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தும் அத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags: ChennaiMK StalinDhinakarandifferently-abled people protesttaminadu government
Share
Tweet
SendShare
Previous Post

திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Next Post

தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் – மலர்கள் தூவி வரவேற்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies