ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் என 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
அதன்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 19ஆம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. ஜீரோ பாயிண்ட்டிற்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் மற்றும் பொதுப்பணித்தறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.