ஹிஷாப் உத் தஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவடைந்தது.
சென்னையில் தாம்பரம்,ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, உள்ளிட்ட 9 இடங்களிலும், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகத்திற்குரிய 11 நபர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்த சோதனை நிறைவடைந்த நிலையில், கைபற்றப்பட்ட ஆவணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்தனர்.