லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது தொகுப்பாளர் லட்டு குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்தி பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,“சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் என்பதற்கா மரியாதை கொடுக்கிறேன்.
ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜிற்கும் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது. லட்டு பிரச்னையை தேசிய விவகாரமாக்க வேண்டாம் என பவன் கல்யாணின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி, பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததால், நேபாளத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது வியப்பளிப்பதாகவும், நாடு திரும்பியதும் தங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அத்துடன் தாம் ஏற்கெனவே வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை பார்க்குமாறு பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டார்.