செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகிய மூவருக்கும் ஊக்கத்தொகையாக தலா 25 லட்ச ரூபாயும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் 15 லட்ச ரூபாயும் என மொத்தமாக 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகாம் இல்லத்தில் வைத்து வழங்கினார்.
மேலும் அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் வீரர், வீராங்கனைகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.