திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்டம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 15 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம்தோறும் இரண்டு முறை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கையை எண்ணும் பணி, வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து எண்ணும் பணி நிறைவடைந்த நிலையில் 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், 2 கிலோ 352 கிராம் தங்கம், 41 கிலோ 998 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.