பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தில் 12 கிராமங்கள் அடங்கியுள்ளன. 700 நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நிலங்களை கைப்பற்றுவத அரசு கைவிடக் கோரி திட்டத்தின் வருவாய் அலுவலரான பிரியதர்ஷினியிடம் மக்கள் மனு அளித்தனர்.