சிவகங்கை அடுத்த காமராஜர் காலனியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜர் காலனியில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அண்மையில், வீடுகளை காலிசெய்யக் கூறி அறநிலையத்துறை சார்வில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.