நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில்வே கேட் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி மோதியதில் இளைஞர் காயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை யாதவர் தெருவை சேர்ந்தவர் சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் நாங்குநேரி நோக்கிச் சென்றார். நாங்குநேரி அருகே ரயில்வே கேட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் சங்கர் தூக்கி வீசப்பட்டு தலையில் காயமடைந்தார்.
பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் நாங்குநேரி போலீஸார் விசாரணை நடத்தினர்.