கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
லால்பேட்டை வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த முகமது ஷாஜகான், தனது நண்பர் ஜலிலுடன் இணைந்து வேலைக்காக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதாவிடம் 84 ஆயிரம் ரூபாய் பெற்ற ஷாஜகான், அவரை டூரிஸ்ட் விசா மூலம் ஓமன் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் உணவு இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும் சங்கீதா இருந்துவந்துள்ளார். இதுகுறித்து சங்கீதாவின் கணவன் கருணாநிதி புகாரளித்த நிலையில் ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஜலிலுயையும் தேடி வருகின்றனர்.