நீலகிரி மாவட்டம் கூடலூரில் போலி மருத்துவர்கள் இயக்கி வந்த 15-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் அதிரடியாக சீல் வைக்கப்பட்டன.
கூடலூரில் போலி மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வதாக புகார் எழுந்து வந்தது. இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சித்தா கிளினிக்குகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது 15க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் சீல் வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து போலி மருத்துவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 47 போலி மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.