தேர்தலில் தோற்றால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றி அடைவோம் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், தற்போது நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைந்தால் 2028-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறினார்.