தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தொழில் அதிபர்கள் ஆங் பெங் செங், லும் காக் செங் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சலுகைகள் அளித்தது போன்ற தீவிர குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிரூபிக்கவில்லை.
எனினும், விதிகளை மீறி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டது போன்ற சிறிய குற்றச்சாட்டுகளை மட்டுமே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஊழல் வழக்கு நடைபெறுவது சிங்கப்பூரில் இது முதல்முறையாகும்.