உக்ரைன் மீது ரஷ்யா தொடர் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை எந்தவொரு சமரசமும் இன்றி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் தீப்பற்றி எரிந்தவாறும், கட்டிடங்கள் தரைமட்டமான நிலையிலும் காணப்படுகின்றன.