தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வதி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைபெற சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒழுகும் GLUCOSE பாட்டில் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெருமளவு GLUCOSE வீணாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “GLUCOSE பாட்டில்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளது” என செவிலியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
மேலும், மூதாட்டியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல செவிலியிர்கள் நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.