திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்போவதாக விஷ்வ இந்து பரிசத் அகில பாரத இணைச் செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஷ்வ இந்து பரிசத் அகில பாரத இணைச் செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூசாரிகளுக்கு நலவாரியம் இருந்தும் அவர்களுக்கு முறையான பலன்கள் கிடைக்கவில்லை என கூறினார். நலிந்த கோயில்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், கோயில் நிலங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.