நீலகிரி அருகே செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், இறந்தவர்களின் சொத்துகளை அபகரிப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும் காப்பகம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டன. இதனையடுத்து உதகை கோட்டாட்சியர் தலைமையில் ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.