சிவகங்கையில் போதிய பராமரிப்பின்றி அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிவகங்கை பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் முறையாக பராமரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும் பஞ்சராகி பேருந்துகள் பாதியில் வழியில் நிற்கும் அவலம் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள பயணிகள், பேருந்துகளை முறையாக பராமரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.