திருவள்ளுர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருமழிசை அடுத்த நேமம் பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.