நீலகிரி மாவட்டம் உதகையில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் ஏற்றிச்செல்லப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உதகையில் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் உள்ள மூட்டைகள் மீது அமர்ந்து பயணிக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
இவ்வாறு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் அதிவேகத்தில் பயணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.