கிண்டி ரேஸ் கிளப் - நீர்நிலையா ? பூங்காவா?
Sep 6, 2025, 01:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிண்டி ரேஸ் கிளப் – நீர்நிலையா ? பூங்காவா?

Web Desk by Web Desk
Sep 25, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்…!

சென்னையில் வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் 1945ம் ஆண்டு கிண்டி ரேஸ்கிளப்புக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடையும் முன்பே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக கூறி குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, அந்நிலத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்திருப்பதாக அரசாணை பிறப்பித்துள்ளது.

பிற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டு மற்றும் திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்தே சென்னையின் பரப்பளவில் 6.7 சதவிகிதம் மட்டுமே பசுமை வெளியாக உள்ளது.

சென்னையின் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கிலும், அதிகரிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் அதிகளவிலான பசுமை வெளிகளை சென்னையில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களோட உடல்நலன், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் போதுமான இடங்களை உருவாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவாகவும், பசுமை வெளியாகவும் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் பூங்காவிற்கு பதிலாக நீர்நிலையுடன் கூடிய பூங்காவை உருவாக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் போதும், ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என மீண்டும் ஆலோசனை வழங்கியது.

இது தொடர்பாக பிறதுறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த பசுமைத் தீர்ப்பாயம், வெள்ளத்தால் ஒருபுறமும், வறட்சியால் ஒருபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் புதிய பசுமை பூங்காவை உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னையில் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதும்,, புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் மிக அவசியம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சென்னையில் இருந்த நீர்நிலைகளில் பாதியளவு கூட தற்போது இல்லாததன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, புயல், வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பெருவெள்ள காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க உதவுவதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் பயன்படும் என்பதால் கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலை அமைப்பதே சரியானதாக இருக்கும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags: CHENNAI NEWSKindy Race Club - Watershed ? A park?
ShareTweetSendShare
Previous Post

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Next Post

திருப்பதி லட்டு விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகார்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies