பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற தமிழக விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மணிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.