ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட வாக்குப்பதிவு! : மதியம் 1 மணி நிலவரப்படி 36.93% வாக்குகள் பதிவு!
Mar 20, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட வாக்குப்பதிவு! : மதியம் 1 மணி நிலவரப்படி 36.93% வாக்குகள் பதிவு!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 61 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.93% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Jammu and Kashmir 2nd phase polling! : 36.93% voting as of 1 pm!
ShareTweetSendShare
Previous Post

லிப்ஸ்டிக் பூசிவந்த பெண் தபேதார் பணியிட மாற்றம்!

Next Post

2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து! : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies