கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு பயணிகளை ஏற்றிச்செல்ல முற்பட்டன.
அப்போது 2 பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று மோதியதில் அதில் பயணித்த 10க்கும் மேற்பட்டார் காயமடைந்தனர். மேலும் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.