தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
பள்ளிகளுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் எனவும் 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் உள்ளதால் காலாண்டு விடுமுறையை நீட்டிக்கக்கோரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில்கொண்டு தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளி திறப்பு 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது