புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நவநசமுத்திரம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரமாக நேற்று மாலை முதல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் காவலாளி காருக்கு அருகே வந்த பார்த்தபோது, காருக்குள் 5 பேர் இறந்து கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இறந்து கிடந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், நித்யா, சரோஜா, தீரன், நிகரிகா என்பது தெரியவந்தது.
சேலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், காரில் கடிதம் ஒன்றை அதிகாரிகள் கைபற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.