சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கல்லூரியில் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் பேராசிரியர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது ரவி என்ற மாணவரின் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரிக்கு வந்த ரவியை தடுத்து நிறுத்திய கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நுழையக் கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக மாணவர்களுக்காக போராட்டம் நடத்திய ரவியை கல்லூரிக்குள் அனுமதிக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என மாணவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.