புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் உள்ள சில கிராமங்களைப் பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைக்கப்படுமென அரசு அறிவித்தது. இதற்கு செங்கீரை ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து 200க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் வீசிவிட்டு சென்றனர்.