திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆபத்தான முறையில் சிறுமிகளை வைத்து ஜீப்பை இயக்கி, வீடியோ எடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை பள்ளபாளையம் பகுதியில் ஆபத்தை உணராமல், சிறுமிகளை வைத்து ஜீப்பை இயக்கி வீடியோ எடுக்கப்பட்டு சமூக வளைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், வீடியோ பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வீடியோ பதிவு செய்த நபர் குறித்து தளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.