சேலத்தில் அரசுப்பேருந்தின் பின்புறம் சினிமா விளம்பரம் இருந்ததற்காக பேருந்து ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
திருச்சியில் இருந்து சேலம் சென்ற அரசுப்பேருந்தை செந்தில் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சென்ற பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர் நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
தொடர்ந்து பேருந்தின் பின்புறம் சினிமா விளம்பரம் இருந்ததற்காகவும், குறிப்பிட்ட பகுதியில் ஹாரன் பயன்படுத்தியதற்காகவும் பேருந்துஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.