தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்ததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
எனவே இதை தடுப்பதற்கு காலை நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதே தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.