இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தால் கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தி வேலைவாய்ப்பு 200 சதவீதம் அதிகரித்ததாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா என்ற இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, இத்திட்டத்தின் வெற்றி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தால் கைப்பேசி இறக்குமதி 85 சதவீதம் குறைந்ததாக கூறியுள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தி வேலைவாய்ப்பு 200 சதவீதம் அதிகரித்ததாக கூறிய பியூஷ் கோயல்,
இத்திட்டத்தால் வர்த்தகம் செய்வது எளிமையானதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு கணிசமாக அதிகரித்ததாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.