ஊழலின் தாய் காங்கிரஸ் என, ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சித்தார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சோனிபட் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஹரியானா காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலை சுட்டிக்காட்டி, பட்டியலினத்தவர்களுக்கு அக்கட்சி அநீதி இழைத்ததாக குற்றஞ்சாட்டினார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை காங்கிரஸின் டிஎன்ஏ-விலேயே இருப்பதாக விமர்சித்த பிரதமர் மோடி, கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய ஊழலை சுட்டிக்காட்டி, அக்கட்சியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.