பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
பாரதிய ஜனசங்கத்தை ஸ்தாபனம் செய்த மூத்த முன்னோடிகளில் ஒருவரான, மதிப்புமிகு பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பொதுமக்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேற்கொண்டோம்.
சமூகத்தில், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற, மதிப்புமிகு பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் ‘அந்தியோயா’ கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்றது.
டெல்லியில் தமிழர்கள் வசிக்கின்ற பகுதியான கனகதுர்கா காலனி, ஆர்கே புரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், உலகில் மிகப்பெரிய கட்சியான பாஜகவில் தங்களை உறுப்பினர்களாக இணைந்து கொண்டார்கள் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.