ஹரியானா மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நமோ செயலி மூலம் ஹரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹரியானாவை சேர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் மகிழ்ச்சியான இயல்பு, தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனத்தோடு கையாள்வது உள்ளிட்டவையும் ஹரியானா மக்களிடம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பூத் மட்டத்தில் களப்பணிகளை விவாதித்த பிரதமர், தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுக்க அவர்களை ஊக்குவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தோல்வியடைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவதாகவும் கூறினார்.