டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.