பாரத் மாதா கி ஜெய் என்னும் முழக்கம் நல்லிணக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டதை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மங்களூரில் உள்ள பொலியார் கிராமத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிலர், பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டு இரு மதங்களுக்கு இடையே பகைமையை வளர்க்க முயன்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாரத் மாதா கி ஜெய் எனும் முழக்கம் நல்லிணக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் எனவும், முரண்பாட்டை அல்ல என்றும் தெரிவித்து வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.