ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க பிரான்ஸ் பிரிட்டன் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா, ஜெர்மனி, ஜப்பான்,பிரேசில் ஆகிய நாடுகளை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேபோல் பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் கேர் ஸ்டாமர் கூறியதாவது: பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.