இந்திய-இலங்கை கூட்டு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், பிரதமர் மோடி உடனான சந்திப்பு இனிமையானதாக அமைந்தாக தெரிவித்தார்.
பிரதமரிடம் 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாகவும், சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்ட பணிக்கு பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை எடுத்துரைத்துள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்திய-இலங்கை கூட்டத்தில் மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.
வழக்கமாக 15 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும் என்றும், தற்போது 45 நிமிடங்கள் பிரதமரிடம் பேசியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.