கா்நாடகா மாநிலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது என்பதற்காகவே, கா்நாடக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.