இந்தியாவை உலகின் நம்பகமான மருந்தகமாக மாற்ற விரும்புவதாக மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.
மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் 50 கிரீன்ஃபீல்ட் ஆலைகள் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பொருளாதாரத்தில் மருந்துத் துறை சீர்திருத்தம் செய்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.