சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாப்பட்டது. சென்னையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன் தியாகியாக மாறிவிட்டதாக விமர்சித்தார். மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததையே விடுதலை கிடைத்ததாக நினைத்து திமுகவினர் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.