ராமநாதபுரத்தில் சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் காதில் பூச்சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிநோக்கம், வேதாளை, மேலமுந்தல், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள மீனவர்கள், மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு காதில் பூச்சுற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.