குறிப்பிட்ட சில நிறுவனத்துக்காக திருப்பதி தேவஸ்தான லட்டு டெண்டர் விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டின் தரத்தில் பக்தர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், அதை ஜெகன்மோகன் ரெட்டி கண்டுகொள்ளவில்லை என விமர்சித்தார்.
கடந்த காலத்தில் தேவஸ்தான விதிகளை மீறி, ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலுக்குச் சென்றதாகவும், அதேபாணியில் தற்போதும் செல்ல முயற்சிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
வீட்டில் பைபிள் படிப்பதாக கூறும் ஜெகன்மோகன் ரெட்டி, பிற மதத்தினரின் உணர்வை மதிக்க வேண்டுமென்றும், மத நல்லிணக்கத்துக்கு அவர் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.