மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், கடைவீதியில் இரவு பகலாக போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில், மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.