தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், புதிய மாற்றங்கள் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையும், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத்துறையும், தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.