உதயநிதி ஸ்டாலினை திறமையானவர் என அவரது குடும்பம் மட்டுமே நம்புவதாக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாஜக சிறுபான்மை பிரிவு நலதிட்ட உதவி வழங்கும் விழா மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
தென் மாவட்டங்களில் கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் அளிக்கபட்டு வருகின்றன அதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பாக வேண்டும்.தாது மணல் எடுப்பதால் பொருளாதாரம் உயரும். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை பாதிப்பு என்று கூறுவது கட்டுகதை
எந்த பாதிப்பும் இல்லாத கள்ளுக்கடை களை திறக்கவேண்டும். ஆனால் ஆண்களின் நரம்பை இழக்க செய்யும் ரம் , பிராந்தி , விஸ்கி போன்றவற்றை புகுத்துகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே மது ஆலை நடத்துபவர்களையும் , டாஸ்மாக் நடத்துபவர்களையும் வைத்து மது விலக்கு மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது
சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றன மாநில அரசு மத்திய அரசு திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழத்தில் எந்த அறிவானவர்களும் திறமையானவர்களும் இல்லை என அந்த குடும்பம் நினைத்து கொண்டு இருக்கினறனர். இவர்தான் திறமையானவர் என்று கோபாலபுரத்து குடும்பம் நம்புகிறது. ஆகவே அவரை துணை முதல்வர் ஆக்குகின்றனர்.
பொதுமக்கள் மன்னராட்சிக்கு ஓட்டு போட்டது போல் நிலை உருவாகியுள்ளது பாஜக ஒவ்வொருவரையும் மோடியாக அண்ணாமலையாக பார்கிறது பாஜகவால் மட்டுமே டீ விற்றவர் பிரதமர் ஆக முடியும் என அவர் தெரிவித்தார்.