இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளரும், தற்போது தமிழக பா’ஜகஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் உள்ள சமுதாய நலனுக்காக அயராது பாடுபடும், ஹெச். ராஜா அண்ணன் அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் அவர்கள், இறையருளால் நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியமுடன் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.