ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் தலைமை காவலர் வீரமரணமடைந்தார்.
கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் அகமது வீரமரணமடைந்துள்ளதாகவும், படுகாயமடைந்த துணை காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்காம் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மாண்ட்லி பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும், மாண்ட்லி பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.