தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதன் மூலம் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவில் உள்ள 131 சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர் வன்னியர்கள் என்றும், அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவி வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வன்னியர்களுக்கு வெறும் 3 அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், பட்டியலினத்தவருக்கும் திமுக தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில், திமுக எம்எல்ஏக்களில் 16 சதவீதம் கொண்ட பட்டியலினத்தவர்களுக்கு 5 அமைச்சர் பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் 3 அமைச்சர் பதவிதான் வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.